முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டதே? முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை: மதுரை ஜீவாநகரில் மேற்கு 3- ம் பகுதி செயலாளர் பைக்காரா கருப்பசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டதே? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 114 - வது பிறந்த நாள் விழா அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க அ.தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் படி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மதுரைவடக்கு, மத்திய, தெற்கு, மேற்கு தொகுதி அ.தி.மு.க.சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க.சார்பில் மேற்கு 3 - ம் பகுதி அ.தி.மு.க.செயலாளர் பைக்காரா கருப்புசாமி தலைமையில் ஜீவாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., வைகைசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பைக்காரா முத்துவேல், சோலைராஜா, ஜெ.மாணிக்கம், சண்முகவள்ளி, சுகந்திஅசோக், சக்தி விநாயகர்பாண்டியன், எம்.எஸ்.கே.மல்லன், சக்தி மோகன், எஸ்.எம்.டி.ரவி,பரவைராஜா, கு.திரவியம், விளாங்குடி கே.ஆர்.சித்தன், மார்க்கெட் எம்.மார்நாடு, முருகேசன், பாண்டிச்செல்வி ஞானசேகரன், ராணிநல்லுச்சாமி, கௌசல்யா விஜயகுமார், கார்னர் பாஸ்கரன், விஜயபாஸ்கர், பாசறை சங்கர், பழங்காநத்தம் ராஜாராம், சண்முகசுந்தரம், பி.ஆர்.சி.ஜெயராஜ், சிங்கம் மணிகண்டன், முத்துமாரிஜெயக்குமார், பிரேமா டிமிட்ராவ், நூர்முகமது, ஜாகீர்,அனுப்பானடி பாலகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் எப்படி இருந்தது. தற்போது 18 மாதங்களில் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் தான். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் தான் சிறு, குறு தொழில் அதிகம் உள்ளது. ஆனால், அந்த தொழில்களுக்கு மின்கட்டணம் ஷாக் அடிப்பது போல் உள்ளது. ஜீவா நகர் பகுதியில் குடிசைத் தொழிலாக அப்பள தொழில் நடைபெற்று வருகிறது. ஆனால் அப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகளும் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கை நிறைவேற்றுவதாக கூறினார். ஆனால் எதுவும் செய்யவில்லை. அடுத்து வரஇருக்கின்ற தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். ஏனென்றால் அ.தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் எங்குபார்த்தாலும், போராட்டம் நடைபெற்று வருகின்றது. இங்கு இருக்கின்ற நிதியமைச்சர் நம் மதுரையைச்சேர்ந்தவர். ஆனால் அவர் மதுரைக்கு என்று எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தி.மு.க.தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதனால் தான் சொல்கிறேன் அடுத்து வரஇருக்கின்ற தேர்தலில் தி.மு.க.மண்ணைகவ்வும். அ.தி.மு.க.நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

திராவிட இனத்தின் கொள்கைகளை உலகறியச் செய்த, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைவர் பேரறிஞர் அண்ணா.ஈரமான சுவர் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் ஈரமான சுவர் அல்ல இரும்புச் சுவர் என்று காண்பித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை எடப்பாடி பழனிசாமி தான்.கோடி ரூபாய் செலவு,  வானுயர்ந்த பேனர்கள், வைத்து தனது மகனின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள் தற்போதைய அமைச்சர். இதற்கு வருகை தந்த முதலமைச்சர் எளிமையாக இருக்கிறார் என்று அமைச்சரைப் பார்த்து கூறுகிறார்.இதுதான் திராவிட மாடலா.திராவிட மாடல் என்று சொல்கிறீர்கள் திராவிட மாடலுக்கான அர்த்தத்தை சொல்லிவிடுங்கள்.அ.தி.மு.க.வின் ரயில் நிற்காது. ஏறுபவர்கள் ஏறலாம் இறங்குபவர்கள் இறங்கலாம். ரயில் சென்றுகொண்டே இருக்கும். யாருக்காகவும் நிற்காது.நாங்கள் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் தருகிறேன் என்று சொன்னாரா. இல்லை. தி.மு.க.வை துணிச்சலோடு எதிர்க்கின்றார். துணிச்சலோடு இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார். விரைவிலே பொதுச்செயலாளராக வருவார். அடுத்த வரஇருக்கின்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி தருவார். இவ்வாறு அவர் பேசினார்.

==============================

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து