முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்திதாசர், அம்பேத்கரின் மணி மண்டப சீரமைப்பு பணிகள் அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2022      தமிழகம்
EV-Velu--2022--10--25

Source: provided

சென்னை: அயோத்திதாசர் மணி மண்டபம் அமைக்கும் பணி மற்றும் அண்ணல் அம்பேத்கர் மணி மண்டப மறு சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று புதியதாக அமைக்கப்பட்டு வரும் அயோத்திதாசர் மணிமண்டபம் மற்றும் அம்பேத்கார் மணி மண்டப மறு சீரமைப்புப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

சட்டப்பேரவை விதி எண். 110-ன் கீழ்  அயோத்திதாசருக்கு மணிமண்டபம் வடசென்னையில் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்தப் பகுதியில்தான் காமராசர் மணிமண்டபம், பக்தவச்சலம் மணிமண்டபம், இராஜாஜி மணிமண்டபம், ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபம் ஆகிய மணி மண்டபங்கள் உள்ளன. ஆகையால் அயோத்திதாசர் மணிமண்டபத்தை இந்தப் பகுதியில் அமைக்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதன்படி அயோத்திதாசர் மணிமண்டபத்தை சுமார் 4786 சதுரடி பரப்பளவில், ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட வேண்டும் என்று ஆணையிட்டதன் அடிப்படையில் இப்பணி 26.9.2022 முதல் துவங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது. 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பணி நிறைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் சிதிலமடைந்து இருந்ததால், மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டதன்படி, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் மறு சீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.  அண்ணல் அம்பேத்கர் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டதால், சிலை அமைக்கும் பணியும், நூலகம் அமைக்கும் பணியும்  நடைபெற்று வருகிறது.   வரும் 27.10.2022 அன்று முதல்வரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 

மேலும் வடகிழக்கு பருவமழை சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பெய்யக்கூடிய நிலை உள்ளது.  சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் காரணமாக பகலில் மேற்கொள்ள இயலவில்லை.  ஆகையால், இரவு 10 மணிக்குமேல் இப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.  வேளச்சேரி-பள்ளிக்கரனை சாலை வடிகால் பணிகள், நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியப் பணிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த  ஆய்வுப் பணியின்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் ஆயிரத்தரசு மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து