Idhayam Matrimony

டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியாக குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Delhi 2025-02-24

Source: provided

புதுடெல்லி : பா.ஜ.க. தலைமையிலான டெல்லி அரசு, ஆண்டுதோறும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், டெல்லியில் முந்தைய ஆம் ஆத்மி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக உயர்த்தியது. அதனையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சூழலில், டெல்லி அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்ட சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி எம்.எல்.ஏ. உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அரசாணையில் டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.5 கோடி என ரூ.350 கோடியை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 4 கோடி வழங்கப்பட்டது, இது 2023-24ல் ரூ.7 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து