Idhayam Matrimony

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா: 257 பேருக்கு பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

புதுடில்லி : நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளம்(69), மஹாராஷ்டிரத்திலும்(44) கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் ஓமிக்ரான் BA.2.86-இன் புதிய வகையான ஜேஎன். 1(JN.1) வைரஸ்தான் தற்போது அதிகம் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல், சோர்வு, தலைவலி, சுவைத் தன்மையை இழத்தல், தசை வலி, கண் சிவத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த ஜேஎன். 1 வகை வைரஸில் LF.7, NB.1.8 உள்பட 30 வகைகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து