முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

KD-The Devil பட டைட்டில் வெளியீடு

புதன்கிழமை, 26 அக்டோபர் 2022      சினிமா
KD-The-Devil-2022-10-26

கன்னட திரையுலகில் KVN Productions, தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களது 4வது திரைப்படம் பெங்களூரில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, KD-The Devil  டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது. பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் இதற்கு குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்புக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இந்தி மற்றும் மலையாளப் பதிப்புகளுக்கு முறையே சஞ்சய் தத், மோகன்லால் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். கன்னட பதிப்பிற்கு இயக்குனர் பிரேம் தானே குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ‘Red Giant Movies நிறுவனமும் .மலையாளப் பதிப்பை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ‘Aashirvad Cinemas’ நிறுவனமும் வழங்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து