முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க-வில் நடிகை கங்கணா இணைவதை வரவேற்கிறோம் ஜே.பி. நட்டா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      இந்தியா
JP-Natta 2022-10-30

Source: provided

சிம்லா ;  பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் (வயது 35), இமாசல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மக்களும் பா.ஜ.க.வும் விரும்பினால் தான் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடத் தயார் என நடிகை கங்கணா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இமாச்சல் தேர்தல் பரப்புரைக்காக சிம்லா வந்துள்ள ஜே.பி. நட்டா, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், கங்கணா ரனாவத் பா.ஜ.க.வில் சேருவது வரவேற்கத்தக்கது. கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் பா.ஜ.க.வில் இடம் உண்டு. 

ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது எனது தனி முடிவு அல்ல. அடிமட்ட தொண்டர்கள் தொடங்கி, தேர்தல் கமிட்டி, நாடாளுமன்ற குழு வரை அனைவரிடமும் ஆலோசனை செய்யப்படும். பா.ஜ.க.வில் இணையும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவர்களின் வலிமை என்ன என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து