முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரில் இனிமேல் புளூ டிக்கிற்கு மாதம் ரூ. 660 கட்டணம்: எலான் மஸ்க்

புதன்கிழமை, 2 நவம்பர் 2022      வர்த்தகம்
Elon-Musk 2022-10-28

டுவிட்டரில் புளூ டிக் முறையை பயன்படுத்துவோர் இனி மேல் மாதம் ரூ. 660 கட்டணம் செலுத்த வேண்டும் என அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் முறையை பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்துகின்றன. இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இந்நிலையில் டுவிட்டர் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில், நாங்களும் கட்டணம் (பில்) செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே டுவிட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இவரது இந்த கருத்தை தொடர்ந்து, புளூ டிக்கிற்கு  இனி மேல் மாதம் 8 டாலர் (ரூ. 660) கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  டுவிட்டரில் பிரபலங்கள், அதிகாரிகள் மட்டுமே பெற்றிருந்த இந்த புளூ டிக் குறியீட்டை இனி யார் வேண்டுமானாலும் பெறலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து