Idhayam Matrimony

சீனாவில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து: 36 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      உலகம்
China 2022 11 22

சீனாவில் உள்ள ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 36 பேர் பலியாயினர். 

மத்திய சீனாவில் ஹெனான் மாகாணம் அன்யாங் நகரில் உள்ள ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்புப் பிரிவினர் உடனடியாக படைகளை அனுப்பி வைத்தனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. 

இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை தவிர, மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலவீனமான பாதுகாப்புத் தரங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் அதிகாரிகளின் ஊழல் காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து