முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த ராணுவ தளபதி 25-ம் தேதிக்குள் நியமனம்: பாக். பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      உலகம்
Khawaja-Asif 2022 11 22

பாகிஸ்தானில் அடுத்த ராணுவ தளபதி வரும் 25-ம் தேதிக்குள் நியமிக்கப்படுவார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார். 

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் (வயது 61) பதவிக்காலம் வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கனவே அவருக்கு 3 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் பதவி நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைக்கவில்லை. இதையடுத்து புதிய ராணுவ தளபதியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அடுத்த ராணுவ தளபதியை நியமிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும், வரும் 25-ம் தேதிக்குள் பணி முடிவடையும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார். ராணுவ தளபதி பதவிக்கு ஐந்து அல்லது ஆறு உயர்மட்ட ஜெனரல்கள் போட்டியில் உள்ளனர். அவர்களின் பெயர்களைக் கொண்ட முறையான பரிந்துரை பட்டியல் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் கவாஜா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து