முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணியம் போற்றுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 11 22

பெண்ணியம் போற்றுவோம் என்ற தலைப்பில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினை, மகளிர் உதவி மையத்தின்  திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, டிஜிட்டல் மீடியா நிபுணர் கிஷோர் தேவா மற்றும் டிஜிட்டல் மீடியா இயக்குநர்  மெரின் ஆகியோர் சந்தித்து வரும்  25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஓழிப்பதற்கான சர்வதேச தினத்தையொட்டி பெண்ணியம் போற்றுவோம் 2022 என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 181 மகளிர் உதவி மையம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 10 வரை அம்மையம் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டு அழைப்பு விடுத்தனர்.

தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ரகசிய சேவை மையம் ஆகும். இதன்மூலம் குடும்ப பிரச்னை உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல்துறை, மருத்துவத்துறை, சட்டஉதவி, மனநல ஆலோசனை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுகின்றன. 

181 இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆன்லைன் உரையாடல் போன்றவை மூலமாக உதவி மையத்தை நாடும் வசதி உள்ளது. மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம். 

181 மகளிர் உதவி மையம் நடத்தவுள்ள பெண்ணியம் போற்றுவோம் 2022-ன் நிகழ்ச்சியில், திரைப்பட விழா, மகளிர் உதவி மையத்தின் விழிப்புணர்வு பயிலரங்கம், கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, சைக்கிள் பேரணி, மணல் சிற்பக்கலை, ஆன்லைன் வழியே கருத்தரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து