முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமலஹாசன் : ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      தமிழகம்
Kamal 2022 11 25

Source: provided

சென்னை :  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ம.நீ.ம. தலைவர் நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். 

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்பினார். அதை தொடர்ந்து அவருக்கு  திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 

இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கமல்ஹாசன் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. இந்நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து