முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் வரும் 5-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி வரும் 5-ம் தேதி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனி்சாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். 

இது குறித்து அ.தி.மு.க. தலைமை விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிச. 05-ம் தேதியன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தவுள்ளனர். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட வளாகத்தில் அமைக்கப்படவுள்ள திறந்த மேடையில் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். 

மேலும் நினைவு நாளான டிச. 05-ம் தேதியன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகி்றார்கள். 

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும், மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா, கேரளா, புது டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் 05-ம் தேதி ஆங்காங்கே அம்மாவின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து