முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.45 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு தகவல்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      இந்தியா
GST 2022-12-01

Source: provided

புதுடெல்லி: நவம்பர் மாதம் ரூ.1.45 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (நவம்பர் ) ரூ.1,45,867 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் 1,45,867 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,681 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ. 32,651 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.77,103 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.38,635 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,433 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.817 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து