முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 2 முதன்மை தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை இ -சேவை மூலம் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
TNPSC 2022-10-28

குரூப் 2 மற்றும் 2 A முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றுகளை இ - சேவை மையங்கள் மூலம் வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2  மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தேவைப்படும் இ-சேவை மையங்களில் கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பயன்படுத்தி தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  இது தொடர்பான உதவிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 2911 –ஐ தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து