முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டிலாவது மக்கள் பயன்படுத்தும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை அரசு வழங்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
RBU 2022-11-29

Source: provided

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கோவிலில் குருவார தின சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனது மகள் உட்பட 51 ஏழை,எளிய மணமக்களுக்கான திருமண விழா அழைப்பிதழை வைத்து சுவாமி தரிசனம் செய்து கோவில் நிர்வாகிகளுக்கு அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவரது மகள் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர். அதை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

பொங்கல் திருநாளில் முதல் முதலில் 100 ரூபாய் பொங்கல் பரிசினை அம்மா வழங்கினார். அதனை தொடர்ந்து அம்மாவின் வழியில் வந்த எடப்பாடியார் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார். 2021-ம் ஆண்டு அரிசி,சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், ஒரு முழு நீளக்கரும்புடன்  2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

கடந்த ஆண்டு குடும்ப அட்டைகளுக்கு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகளில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை உள்ளிட்ட 20 வகையான பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து பெரும்பாலும் வாங்கப்பட்டது. இந்த பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவில் இல்லை என்று எடப்பாடியார் சுட்டி காட்டினார். பொங்கல் பரிசு தொகை என்பது வெறும் பரிசுத் தொகுப்பு அல்ல, அதில் உணர்வுகள் இருக்கிறது. 

இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் கொள்முதல் நிலை என்ன அரசு தெளிவாக நீதிமன்றத்திலே கூறுவதற்கு முன் வருமா?  கடந்த பொங்கல் பரிசு தொகுப்பில் செய்து இருக்கிற குளறுபடிகளுக்கு, சாட்சிகளே தேவையில்லை. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வாங்கியவர்கள் எல்லோரும் சாட்சியாக இருக்கிறார்கள். ஆகவே இந்த அரசு வருகிற ஆண்டிலாவது, பொங்கல் பரிசு பொருட்களை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து