முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ்.க்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
EPS 2022 12 04

Source: provided

புதுடெல்லி : ஜி 20 மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து