முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி. விமர்சனம்

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      சினிமா
DSP-Review 2022 12 05

Source: provided

விஜய் சேதுபதியின் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிஎஸ்பி.. கதை; வேலை செய்தால் அரசாங்க வேலைதான் செய்ய வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார் நாயகன் விஜய் சேதுபதி. அதே நேரம் அணு க்ரீத்தியுடன் காதலில் விழுகிறார் நாயகன். இந்நிலையில், விஜய் சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்காக வந்த விஜய் சேதுபதியின் நண்பர்களுக்கும் வில்லனுக்கும் மோதல் ஏற்படுகிறது. 

இதில் வில்லனை வெளுத்துக்கட்டுகிறார் விஜய் சேதுபதி.

இதனால் தனது தங்கையின் திருமணத்தை கூட பார்க்கமுடியாமல் மறைந்து வாழ்கிறார். பின்னர் என்ன நடந்தது? அவர் எப்படி டி.எஸ்.பி ஆனார்? என்பதே படத்தின் மீதி கதை. விஜய் சேதுபதி வழக்கமான தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நாயகியான அணு கீர்த்தியின் நடிப்பு ஓகே ரகம் தான். இளவரசு, பிரபாகரன் ஆகியோர் தங்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கதையும் திரைக்கதையும் வலுவாக அமைந்திருந்தால் டிஎஸ்பி பட்டையை கிளப்பி இருப்பார். இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து