முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 165 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு சரிந்தது

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 12-06

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் புதிய பாதிப்பு 165-ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 73 ஆயிரத்து 783 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 251 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,345 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 89 குறைவாகும். தொற்று பாதிப்பால் டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-யை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,633 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து