தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் / ஷிம்லா: குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் 7-வது முறை பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடைசித் தேர்தலாக அமைந்துவிட்ட குஜராத் சட்டப்பேரவை, இமாச்சலப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரஸும் தலா ஒரு வெற்றியோடு நிறைவு செய்துள்ளன.
குஜராத் - இமாச்சலில்...
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதியும், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை...
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. நேற்று அவை திறக்கப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கியது. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி 181 தொகுதிகளில் போட்டியிட்டது.
கடந்த தேர்தலில்....
இந்நிலையில் குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜ.க. பெரும்பான்யான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றியை தந்துள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி வாய்ப்பு அமையவில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு சமீபமாக நடந்து முடிந்திருந்த பட்டிதார் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம். ஹர்திக் படேல் முன்னெடுத்த அந்தப் போராட்டம் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அதனால் 99 இடங்களைக் கைப்பற்றியது.
வரலாற்று வெற்றி...
100-க்கும் கீழான தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் சறுக்கலாகவே கருதியது. ஆனால், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பா.ஜ.க.. கடந்த முறை வாக்குகள் சிதறக் காரணமாக இருந்த ஹர்திக் படேல் இந்த முறை பா.ஜ.க. வேட்பாளர். அந்த அளவுக்கு தேர்தல் உத்திகளை சிறப்பாக வகுத்து சொன்னபடியே வரலாற்று வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது.
வரலாற்றுச் சாதனை...
இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பா.ஜ.க.வின் கோல்டன் பீரியட் என்றால், அது 2002-ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது.
சூறாவளிப் பிரச்சாரம்...
குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த நாள் அதற்கான வெற்றிப் பேரணியை மோடி குஜராத்தில் தான் நடத்தினார். உண்மையில் அவர் அப்போதே குஜராத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி அலை...
'நான் உருவாக்கிய குஜராத்' என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் முகமாக தாமே இருப்பேன் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேய்ந்துபோன காங்கிரஸ்: 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பா.ஜ.க.விற்கு தாவினர். அதனால் அதன் பலம் சட்டப்பேரவையில் எடுபடவில்லை. இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் களத்தில் இறங்கி வேலை செய்வதில் விறுவிறுப்பைக் காட்டவில்லை. தோல்வியை முன் கூட்டியே கணித்துக் கொண்டதுபோல் நாங்கள் அமைதியாக காய் நகர்த்துகிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. சொல்லப்போனால் 1985க்குப் பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தொடர்ந்து தேய்ந்து கொண்டேதான் இருக்கிறது.
காலூன்றிய ஆம் ஆத்மி...
இந்தத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி தனது இருப்பை உறுதி செய்தவிதம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்து பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் மேற்கொண்ட துணிச்சலான பிரச்சாரம் தான் அதற்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இமாச்சல்லில் காங்.,..
இமாச்சலப் பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 2017 தேர்தலில் பா.ஜ.க. 44 என்ற எளிதான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சிபிஎம் ஒரு தொகுதியிலும் சுயேட்சைகள் இருவரும் வென்றிருந்தனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட ஆரம்பக்கட்ட முடிவுகள் ஒரு எளிதான வெற்றியை நோக்கி காங்கிரஸை இட்டுச் செல்லவில்லை.
39 தொகுதிகளில்...
நீண்ட இழுபறிக்குப் பின்னர் பிற்பகலில் இருந்தே காங்கிரஸின் வெற்றி உறுதியானது. காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 26 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான் கிடைத்துவிடும்.
காங்., எச்சரிக்கை...
இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
27 ஆண்டுகளாக....
குஜராத்தில் 1995ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார். தற்போது 7-வது முறை அமோக வெற்றியுடன் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
BOX - 1
குஜராத் தேர்தல் (மொத்தம் - 189):
கட்சி தொகுதிகள்
1) பா.ஜ.க. 156
2) காங்கிரஸ் 17
3) ஆம் ஆத்மி 5
4) பிற 4
BOX - 2
இமாச்சல் தேர்தல் (மொத்தம் - 69):
கட்சி தொகுதி
1) காங்கிரஸ் 40
2) பா.ஜ.க. 25
3) பிற 3
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 3 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 6 days 5 min ago |
ராகி அடை![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்கும் வசதி : தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்தது
30 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
உணவு, எரிபொருட்கள் இன்றி பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்
30 Jan 2023இஸ்லாமாபாத் : உணவு, எரிபொருட்கள் இன்றி கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன.
-
தேசபிதா காந்தியின் 76-வது நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Jan 2023சென்னை : 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட போப் வலியுறுத்தல்
30 Jan 2023ரோம் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ்
-
ஹாக்கி உலகக் கோப்பை தோல்வி: இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் உள்பட 3 பேர் விலகல்
30 Jan 2023சென்னை : நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.
-
விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்
30 Jan 2023Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும
-
பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
30 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி
30 Jan 2023லாகூர் : இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி
30 Jan 2023திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
30 Jan 2023சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்
30 Jan 2023கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல ஷபாலி வர்மா விருப்பம்
30 Jan 2023முதலாவது மகளிர் ஜூனியர்(யு19) உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்
-
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்
30 Jan 2023வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
30 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
-
ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி
30 Jan 2023ஸ்ரீநகர் : இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.
-
முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
30 Jan 2023சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
-
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் இன்று துவங்குகிறது : 4 பேரை மட்டும் அழைத்து வர வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
30 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாகல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட
-
திரிபுரா சட்டசபை தேரதல்: திரிணமூல் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
30 Jan 2023கொல்கத்தா : திரிபுரா பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-31-01-2023.
31 Jan 2023 -
தங்களது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
30 Jan 2023இஸ்லாமாபாத் : வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.
-
மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
வீடியோ விவகாரம்: 'எடிட்' செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் : பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால்
30 Jan 2023கோவை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது:தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிப். 1-ல் கனமழைக்கு வாய்ப்பு
30 Jan 2023சென்னை : வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கட்கிழமை காலை (ஜன.30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
-
பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
30 Jan 2023புதுடெல்லி : பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.