முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டஸ் புயல் தாக்கம்: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதமடைந்தது

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Marina 2022 12 -09

மாண்டஸ் புயல் தாக்கத்தால் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்தது.  சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் 1.14 கோடியில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது. 

குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது.  சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னையில் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து