முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      உலகம்
Elon-Musk 2023 01 26

டுவிட்டர் வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தப் பெயரை அவரது வழக்கறிஞர் தவறுதலாக சொல்லியுள்ளார். அது மஸ்கிற்கு ரொம்பவே பிடித்து போயுள்ளது. ஒரு காரசாரமான விவாதம் நடந்த போது மிஸ்டர் ட்வீட் என சொல்லியுள்ளார்.  

இது டுவிட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய காரணத்தால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அல்ல. டுவிட்டர் தளத்தில் தனது நேரத்தை அதிகம் செலவிட்டு வருபவர் எலான் மஸ்க் என்பதால் அதை கருத்தில் கொண்டே இந்த பெயர் அவருக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து