முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழா அணிவகுப்பில் பார்வையாளர்களை கவர்ந்த தமிழ்நாடு வாழ்க வாகனம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      தமிழகம்
Tamilnadu 2023 01 26

74-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில், அணிவகுப்பு ஊர்வலத்தில் முதலில் வந்த தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க வாகனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. 

நாட்டின் 74-வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்கார ஊர்திகள் வலம் வந்தன.  

இந்த அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வாழ்க என்று வாசகம் இடம்பெற்றிருந்த வாகனம் முதலில் வந்தது. இதனை பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர். இந்த வாகனத்தில் தமிழ்நாடு என்ற எழுத்துடன் கூடிய கோலமும் இடம்பெற்றிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து