முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      தமிழகம்
EPS 2023 01 27

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

 ஈரோட்டில் நேற்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக் கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப் பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும். கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும்.

2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. அரசு கிள்ளி போடவில்லை. அ.தி.மு.க.வினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம். 5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை போன்ற திட்டங்களை கூட நிறுத்தி விட்டனர். 

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து