எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மெல்பர்ன் : நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய ஆட்டக்காரர்கள் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா இணையர் தோல்வியை தழுவி உள்ளனர். இந்நிலையில், “இது தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடர்” என சொல்லி ஆனந்தக் கண்ணீர் சிந்தி மிகவும் உருக்கமாக சானியா பேசி இருந்தார்.
பிரேசில் ஜோடிக்கு...
கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி நேற்று காலை கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. பிரேசில் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கிராண்ட் ஸ்லாம்...
இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 36 வயதான அவர் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
ஓய்வு அறிவிப்பு...
2013-ல் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர். இப்படி பல சாதனைகளை படைத்து நாட்டுக்குப் பெருமை சேர்த்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் என்றும் அப்போது சொல்லியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில்...
“நான் அழுதால் அது ஆனந்தத்தால் மட்டுமே. சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள். நான் இன்னும் சில தொடர்களில் விளையாட உள்ளேன். எனது தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு பயணம் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2005-ல் தொடங்கியது. அப்போது எனக்கு 18 வயதுதான். மூன்றாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸுற்கு எதிராக விளையாடி இருந்தேன். இங்கு விளையாடியதில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன்.
எதிர்பார்க்கவில்லை...
ராட் லேவர் களத்தில் எனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்வதில் மகிழ்ச்சி. எனது 4 வயது மகன் முன்னிலையில் கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. அது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனது பெற்றோர்களும் இங்கு உள்ளனர்” என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |