முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 220.4 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன : மத்திய அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 95.17 கோடி 2-வது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், இதுவரை மொத்தம் 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து