இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. ஆனால், பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் திமுக ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், முதல்வரிடம் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, எந்தெந்த இயக்குநர் பணியிடங்கள் எப்போது காலியாகின்றன என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். இந்தச் சூழ்நிலையில், இயக்குநர் பதவிகள் வகிப்பவர்களின் ஒய்வுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்திற்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியிருந்தால், முக்கியமான இயக்குநர் பதவிகள் இன்று காலியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.
முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 12 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 11 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் ஐ.பி.எல். போட்டி: உ.பி.வாரியர்ஸ் 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்
20 Mar 2023மும்பை : நடப்பு மகளிர் ஐ.பி.எல். போட்டியில் உ.பி.வாரியர்ஸ் குஜராத்தை வீழ்த்தி 3 - வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார்: ஜப்பான் பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை : இருநாட்டு உயர்மட்ட குழு ஆலோசனை
20 Mar 2023புதுடெல்லி : ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
சூர்யகுமாருக்கு பதில் சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்: வாசிம் ஜாபர்
20 Mar 2023ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது: 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்பட உள்ளது.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
தமிழக பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்
20 Mar 2023தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது.
-
1000 புதிய பஸ்கள் கொள்முதல்: போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு
20 Mar 2023சென்னை : மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணத்திற்கு 2,800 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்திற்கு 1,500 கோடி ரூபாயும், டீசல் மானியத்திற்கு 2,000
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
நிலம் வாங்குவோருக்காக பதிவுக்கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனி