முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் உரையின் போது பாராளுமன்றத்தில் எதிரொலித்த 'மோடி' 'ஜோடோ' முழக்கங்கள்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Modi-2022-02-01

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது'மோடி' மற்றும் 'ஜோடோ' முழக்கங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.

மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக தாக்கல் செய்துள்ளார். பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருபக்கம் மோடி மோடி என்ற கோஷமும், இதற்கு எதிராக மறுபக்கம் ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்ற முழக்கமும் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.

பட்ஜெட் தாக்கல் செய்த போது, திடீரென பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறிதும் தாமதிக்காமல், ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ என்று முழங்கினர். இதனைப் பார்க்கும் போது பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறப்பான எதிர்தாக்குதல்களைக் கொடுக்கவும் செய்யவும் எதிர்க்கட்சிகள் மிகத் தயாராக வந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் எதிரொலிக்க பல பிரச்னைகள் காத்திருக்கும் நிலையில், இந்த கோஷங்கள் நேற்று எதிரொலித்தன்.  பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மக்களவையில் முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்து, 12.40 மணியளவில் நிறைவு செய்தார். அவா் தாக்கல் செய்தது 5-வது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து