முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Kashmir 2023 02 01

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், பனிச்சறுக்குக்காக சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த 21 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பாரமுல்லா போலீசார் மற்றும் சுற்றுலாத்துறையின் கூட்டு மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 19 பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் 2 உள்ளூர் வழிகாட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மேற்படி சட்ட நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து