முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      விளையாட்டு
Shreyas-Suryakumar 2023 02

Source: provided

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

சுற்றுப்பயணம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

காயத்தால் விலகல்...

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

விளையாடுவது சந்தேகம்...

அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யகுமார் - சுப்மன் கில்....

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானால் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து