முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      தமிழகம்
EPS 2023 02 03

Source: provided

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 

பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அதன் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன், பொன்னையன், பெஞ்சமின், பா.வளர்மதி, கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் ராஜேஷ், சத்யா, வேளச்சேரி அசோக், ஆதிராஜாராம், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளர் துரைப்பாக்கம் டி.ஜி.கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. ஜெயவரதன், வட சென்னை வழக்கறிஞர் ராயபுரம் பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன் என்ற ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில், மாணவரணி துணை செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முகப்பேர் இளஞ்செழியன், வடபழனி மின்சார சத்ய நாராயமூர்த்தி, ராமலிங்கம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து