எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் போன்றவை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 பேரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர போலீசார் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதே போல் 4,800 ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025