முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Vadalore 2023 01 29

Source: provided

வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இன்று (5-ம் தேதி) 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. 

கடலூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 152-வது ஜோதி தரிசன விழாவையொட்டி, சத்திய ஞான சபையில் அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் இல்லத்தில் இருந்து மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது. 

இதையடுத்து வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும் சன்மார்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதையடுத்து சத்திய ஞான சபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பலவகை பழங்கள், சீர்வரிசைப் பொருள்களுடன், வள்ளலார் பயன்படுத்திய பொருள்களையும் வள்ளலார் திருவுருவ படத்தையும் பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக சத்திய ஞான சபை வளாகத்தில் அமைந்துள்ள கொடிமரம் அருகே வந்து ஒன்று கூடினர்.

பின்னர் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை -அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் பாடலை பாடியும் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களைப் பாடி கொண்டே காலை 10 மணியளவில் சன்மார்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது. 

இன்று (5-ம் தேதி)  காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, 6ம் தேதி மறுநாள் (6-ம் தேதி) காலை 5.30 மணி என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதையடுத்து 7-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாக தரிசனமும் நடைபெறும்.

விழாவை காணவரும் பக்தர்களுக்காக அறநிலைய துறை மற்றும் வடலூர் நகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 900 போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து