முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      சினிமா
CM-1 2023 02 05

Source: provided

சென்னை : சென்னையில் காலமான புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி வாணிஜெயராமின் இல்லத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

முடிசூடா இசை வாணியாக விளங்கிக் கொண்டிருக்கிற வாணிஜெயராம்,  மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.  வேலூர் மாவட்டத்திலே பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர் வாணிஜெயராம்.

10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார். அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்னரே எதிர்பாரத நிலையில் அவர் மறைந்திருக்கிறார். 

அவரது மறைவு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக திரையுலகிற்கு நான் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து