முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகராஜா கோவிலில் தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Nagaraja-temple 2023 02 05

Source: provided

நாகர்கோவில் : நாகராஜா கோவிலில் 9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

 நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும். 

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 

9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.  இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள். இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 4 ரத வீதிகளிலும் தேர் இழுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. 

தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான இன்று 6-ம் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து