இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்தான்புல் : துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது. துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக இது பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்கு மாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பலர் என்ன நடந்தது என தெரியாமல் தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டனர். நில நடுக்க பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் ஆடியது. பொது மக்கள் வீடுகளை விட்டு அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்தனர். துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பதற்றம் உருவானது. துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி, அதியமான், மலாட்டியா, தியார்படுர் உள்ளிட்ட 8 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அந்நாட்டு அதிபர் தயாயில் கிர்டோசன் பாதிக்கப்பட்ட மாகாணங்களை சேர்ந்த கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பாகவும், அதிகாரிகள் மீட்பு பணிகளை முழு வீச்சில் செல்படுத்துமாறும் அறிவுறுத்தினார். துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 230 பேர் வரை இறந்து விட்டனர். 516 பேர் படுகாயம் அடைந்தனர். துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,300-ஆக அதிகரித்துள்ளது.
உருக்குலைந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் இன்னும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரபடுத் தப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகுதான் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். மீட்பு பணி நடந்து வரும் கட்டிடங்கள் முன்பு உயிர் தப்பியவர்கள் சோகத்துடன் நின்று உள்ளனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கதி என்ன என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். தங்கள் கண்முன் வீடுகள் இடிந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. தீயணைப்பு துறை மற்றும் போலீசாரின் மீட்பு பணியில் பொதுமக்க ளும் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நில நடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. லெபனான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 40 நொடிகள் நீடித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே உருண்டு விழுந்தனர். 2 நாடுகளை உலுக்கிய நில நடுக்கத்தால் தெற்கு இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கி நாட்டில் நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 1999-ம் ஆண்டு பூகம்பத்திற்கு 17 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அந்த சமயம் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 40 பேரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேரும் இறந்தனர். அதன்பிறகு நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 180-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கறேன். கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 20 sec ago |
கீரை ஆம்லெட்![]() 3 days 23 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக யுவராஜ் டுவீட்
25 Mar 2023அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ்.
-
கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 124 பேரின் பட்டியல் வெளியீடு
25 Mar 2023பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்கட்ட வேட்பாளர்கள்
-
100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்: புடினிடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வீடியோ வைரல்
25 Mar 2023மாஸ்கோ : 100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், புடினிடம் கூறிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மாநில மொழிகளில் ஐகோர்ட் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு
25 Mar 2023சென்னை : ஐகோர்ட் தீர்ப்புகள் அனைத்தும் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
-
சென்னை, மும்பை. கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் : தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
25 Mar 2023மதுரை : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.
-
முதுநிலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இன்று துவக்கம் : அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
25 Mar 2023சென்னை : எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: கவர்னர் ஆர்.என்.ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
25 Mar 2023சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து: 2 பேர் பலி
25 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு : முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
25 Mar 2023சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
-
தமிழகத்தில் நீதியின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் : அமைச்சர் ரகுபதி பெருமித பேச்சு
25 Mar 2023மதுரை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீதியின் வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
தேசிய பங்கு சந்தையில் இணைந்த வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்
25 Mar 2023திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் முதல் நாளே இந்த நிறுவனத்தின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகியுள்ளத -
தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேச்சு
25 Mar 2023மதுரை : தொன்மை வாய்ந்த மொழியான தமிழ், விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.
-
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
25 Mar 2023வாஷிங்டன் : குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக இந்தியருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
-
166 கோடி ரூபாயில் மதுரை கோர்டுக்கு கூடுதல் கட்டிடங்கள் : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடிக்கல்
25 Mar 2023மதுரை : ரூ.166 கோடியில் மதுரை கோர்டுக்கு கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிடங்களுங்கான அடிக்கல்லை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நேற்று நாட்டினார்.
-
36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
25 Mar 2023சென்னை : 36 செயற்கை கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
-
ராகுல் தகுதி நீக்கம்: மாநிலம் முழுவதும் நாளை முதல் போராட்டம் நடத்த காங். திட்டம்: கே.எஸ்.அழகிரி
25 Mar 2023சென்னை : ராகுலின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து மத்திய பா.ஜ.க.
-
மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை
25 Mar 2023சென்னை : மாநிலங்கள் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள உரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை : அன்புமணி ராமதாஸ் பேட்டி
25 Mar 2023கடலூர் : என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதே எங்களுடைய கோரிக்கை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தமிழகத்தின் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
25 Mar 2023சென்னை : தமிழகத்தின் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ காலமானார் : சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல்
25 Mar 2023நியூயார்க் : இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ தனது 94 வயதில் காலமானார்.
-
இண்டிகோ விமானத்தில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் தம்பதியருக்கு பாராட்டு
25 Mar 2023கோவை : ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் நாயகர்களாக அறியப்படும் பொம்மன், பெள்ளி தம்பதியர் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர்.
-
ஆன்லைன் ரம்மியால் திருச்சியில் ஊழியர் ஒருவர் தற்கொலை
25 Mar 2023திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
13-வது உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் போரா, நிது தங்கம் வென்று சாதனை
25 Mar 2023டெல்லி : சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா மற்றும் நிதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
-
தொடர்ந்து கேள்வி கேட்பேன்: ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் : டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி
25 Mar 2023புதுடெல்லி : அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் தினசரி பாதிப்பு உயர்வு: கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
25 Mar 2023புதுடெல்லி : நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு மீண்டும் கடிதம் மூலம் அற