முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் : வரலாறு படைப்போம் என கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      தமிழகம்
KS-Thenarasu-1 2023 02 07

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் கே. எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையடுத்து நேற்று முதல் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதலில் அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அதிமுகவினர் பிரசாரத்தை தொடங்கினர். வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து  இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் நேற்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பிரசாரத்தில் கூட்டணி கட்சியான தமாகாவைச் நிர்வாகிகள் விடியல் சேகர், யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் ஈரோடு மணல்மேட்டில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. தொடக்க நாளே குபேர மூலையில் பிரசாரம்  தொடங்கப்பட்டு உள்ளன. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும் , வெற்றியை பெருகுவது ஆகும்.  திண்டுக்கல்  இடைத்தேர்தல் போல்  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். புதன்கிழமை வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.அ.தி.மு.க. வெற்றியை  யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள்.   ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி  வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து