முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும்: செங்கோட்டையன் பேட்டி

புதன்கிழமை, 15 மார்ச் 2023      தமிழகம்      அரசியல்
Sengottaiyan 2023 01 28

பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஜனநாயக நாட்டில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாபெரும் இயக்கத்தை பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு தவறி விட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. 

எதிர்க்கட்சியை நசுக்க வேண்டிய நிலையை அரசு  உருவாக்கியுள்ளது. இது அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும். தமிழக காவல் துறையானது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரிய செயலாகும். 

இது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்வது இந்த அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. பா.ஜ.க. வுடன் கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து