முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் மேலும் 8 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குகிறது ஜியோ

புதன்கிழமை, 15 மார்ச் 2023      தமிழகம்      வர்த்தகம்
5-G 2021 07 19

கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டில் மேலும் 8 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை தொடங்குகிறது. 

இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவுக்கு செல்போன் சேவை வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட முன்னணி டெலிகாம் நிறுனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் செல்போன் நெட்வொர்க் வர்த்தகம் ஏற்றம் கண்டுதான் வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ இந்தியாவில் இணையப் புரட்சியை ஏற்படுத்திவருகிறது.

தரமான 4 ஜி இணைய சேவையை வழங்கியதன் மூலம் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஜியோ உருவெடுத்தது. தற்போது, ஜியோ நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு 5 ஜி சேவையை வழங்கிவருகிறது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோ 5 சேவை வழங்கும் எல்லையை அதிகப்படுத்திவருகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரூ 5ஜி சேவைகளை நாடு முழுவதும் 34 புதிய நகரங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மேகாலயா, ஆர்டிஷ், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய நகரங்கள் உள்ளன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்த உள்ளது. இந்தியா முழுவதும் மேலும் 34 நகரங்களில், 5G சேவையை தொடங்க உள்ளதால் அதன் எண்ணிக்கை 365ஆக அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 30 முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது!

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து