முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள 3-வது ஒருநாள் போட்டிக்கு டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      விளையாட்டு
India-Australia 2023 03 18

Source: provided

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- ஆஸி. இடையே நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்களை வாங்க ரசிகர்கள் திரண்டனர்.

புனரமைக்கும் பணி... 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் 5,000 கூடுதல் இருக்கைகளுடன் புதிய ஸ்டாண்ட் கட்டப்பட்டது. ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டினார்.

டிக்கெட் விற்பனை...

புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.டோனி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று திறக்கப்பட்ட எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

ரசிகர்கள் திரண்டனர்....

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற நள்ளிரவு முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.இதனால் சேப்பாக்கம் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து