முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Xi-Jinping 2023 03 17

Source: provided

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. 

இது குறித்து புடின் கூறும்போது, சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரத்தான் முயற்சி செய்கிறது. இந்த விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது 

ஆனால் போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை. ரஷ்யாவின் முக்கிய வர்த்தக நாடாக சீனா உள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து