முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல்காந்தி மீண்டும் கடிதம்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      இந்தியா
Rahul-2023-03-16

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.

ராகுல்காந்தி சமீபத்தில் லண்டன் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு பா.ஜனதா குற்றம் சாட்டியது. எனவே ராகுல்காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை பாராளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்று பா.ஜனதா தெரிவித்து உள்ளது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி உள்ளது.

இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ந்தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன் வைக்கிறேன்.

பாராளுமன்ற நடைமுறையின் கீழ் உள்ள சட்ட பிரிவு 357, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குகிறது. சபாநாயகரின் அனுமதியுடன் இந்த சட்ட பிரிவின் கீழ் உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க முடியும்.

ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சட்டபிரிவு 357-ன் கீழ் தன்னிலை விளக்கம் அளிப்பது தான் பொருத்தமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து