முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி மோசடி வழக்கு: இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      உலகம்
Imran-Khan 2023 03 23

நிதி மோசடி வழக்கில் இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். 

பரிசு பொருள் மோசடி மற்றும் நீதிபதி, போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது ஆகிய வழக்குகளில் இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜரானதால் அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இம்ரான் கான் மீது தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. 

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட நிதியுதவி வழக்கில் இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உயர்மட்ட விசாரணை அமைப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு இரான் கானின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 6 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 5 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 6 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து