எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சூரத்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
முன்னதாக, காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?" என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
நான்காண்டுகள் பழமையான இந்த அவதூறு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கடந்த வாரத்தில் கேட்டு முடித்திருந்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, தீர்ப்பை நேற்று (மார்ச் 23 ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தார். நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இதற்காக ராகுல் காந்தி காலையிலேயே சூரத் நகரத்திற்கு வந்திருந்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இதற்கு முன்பு, தன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499, 500 கீழ் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது, அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூர்னேஷ் மோடி, ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீர்ப்புக்கு பின்னர் அதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வரோதா,"பயந்து போன அனைத்து அரசு எந்திரங்களும், தண்டனை, பாரபட்சம் போன்றவைகளைத் திணிப்பதன் மூலம் ராகுல் காந்தியின் குரலை நசுக்கப் பார்க்கின்றன. எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான். அவன் உண்மையைப் பேசி வாழ்பவன், தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான். அவன் தொடர்ந்து இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக்கொண்டே இருப்பான். உண்மையின் சக்தியும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுடன் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா3 days 1 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 5 days 23 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 2 days ago |
-
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்
05 Jun 2023முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
-
மாமன்னன் இசை வெளியீட்டு விழா
05 Jun 2023மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
-
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை
05 Jun 2023ஊட்டி : நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
-
500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
05 Jun 2023சென்னை : 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு : ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
05 Jun 2023சென்னை : கடுமையான வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
வீரன் விமர்சனம்
05 Jun 2023மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன். கதை,
-
பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பீகார் முதல்வர் நிதிஷ்
05 Jun 2023பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உ
-
முதல் ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகள் வெற்றி
05 Jun 2023வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது.
-
சிறை கைதிகளுக்கு புதிய உணவு திட்டம்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புழல் சிறையில் துவக்கி வைத்தார்
05 Jun 2023சென்னை : சிறை கைதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய உணவு திட்டத்தை நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புழல் மத்திய சிறையில் துவக்கி வைத்தார்.
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-ம் தேதி சேலம் பயணம் : ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
05 Jun 2023சேலம் : சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்
-
ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு : வரும் 20-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் 6 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை.
-
அமித்ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு : பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
05 Jun 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்: பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
05 Jun 2023மும்பை : பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
8-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2வது வெற்றி
05 Jun 2023ககாமிகஹரா : ஜப்பானில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
கம்பம் அருகே மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது : 144 தடை உத்தரவு வாபஸ்
05 Jun 2023உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
-
துரிதம் விமர்சனம்
05 Jun 2023வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம்.
-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறோமா? - ஒடிசா அரசு விளக்கம்
05 Jun 2023புவனேஸ்வர் : பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்
-
சரத்குமார் நடிக்கும் போர் தொழில்
05 Jun 2023விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்: ரணில் விக்ரமசிங்கே
05 Jun 2023கொழும்பு : இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது.
-
பிரமாண்டமாக வெளியான ஸ்பைடர்-மேன்
05 Jun 2023இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் படம் மற்றும் ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் SPIDER-MAN:ACROSS THE S
-
உன்னால் என்னால் விமர்சனம்
05 Jun 2023சோனியா அகர்வால், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, ஆகியோருடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ.
-
தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
05 Jun 2023சென்னை : தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.