முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கிய இஸ்லாமியர்கள்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      ஆன்மிகம்
Ramalan 2023 03 23

முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆகும். இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயம் தொடங்கி மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். 

மேலும் இந்த நாட்களில் வசதி இல்லாதவர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மக்களின் கடமையாகும். இந்த உதவியை தான் சகத் என்கிறார்கள். மேலும் நோன்பு காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் திருக்குரான் அனைத்தையும் வாசிக்கவேண்டும். 

இந்த காலக்கட்டத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டும். கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் எப்போதும் அவர்களுக்கு அருகிலேயே பயணிப்பது போன்ற எண்ணம் ஏற்படும் என நம்பப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் 22-ம் தேதி பிறை தென்படாததால் நேற்று முன்தினம் மாலை ரமலான் மாத முதல் பிறையாக கணக்கிடப்பட்டு இரவு தொழுகை நடைபெறுகிறது. நோன்பு நோக்கவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ம் தேதி (சனிக்கிழமை) இரவு பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் என்றும், 12-ம் தேதி மரீப் முதல் தொடங்க உள்ளது. 18-ம் தேதி மாலை பெரிய இரவு என அழைக்கப்படுகின்ற லைலத்துல் கதர் இரவு என்றும், ரமலான் ஈத் 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சந்தேக நாள் என நினைவுபடுத்தப்படுகிறது. அனைவரும் ரமலான் மாதத்தில் பகலில் நோன்பு வைத்து இரவில் இபாத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டதுடன், அதிகாலை முதல் நோன்பு தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து