முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியாவில் அடுத்தடுத்து படகுகள் கவிழ்ந்த விபத்தில் 7 அகதிகள் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      உலகம்
Tunisia 2023 03 26

Source: provided

துனிசியா : துனிசியாவில் அடுத்தடுத்து படகுகள் கவிழ்ந்த விபத்தில் 7 அகதிகள் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர். 

ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது அவர்கள் பெரும்பாலும் கடல் மார்க்கமாக படகுகளில் செல்ல முற்படுகின்றனர். இதில் பல பயணங்கள் ஆபத்தில் முடிந்து விடுகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் இவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்று முன்தினம் துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 34 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. 

துனிசியாவில் கடந்த 2 நாட்களில் நடந்த 5-வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். இந்த விபத்துகளில் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 67 பேர் மாயமாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து