
Source: provided
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் உள்ளது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் (தமிழ் புத்தாண்டு 2023) வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று 27-ம் தேதி காலை 11 மணி முதல் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் www. http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.