எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கும் அ.தி.மு.க. கூட்டணியுடன்தான் பா.ஜ.க. பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 27 சதவீத அறிவிப்புகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்தும், 110 அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் ஏற்கெனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சியில் 1704 அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதாகவும், இதில் 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 492 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த உண்மையை மறைத்து, திட்டமிட்டு அ.தி.மு.க. ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று தவறான அவர் செய்தியை கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் அட்சய பாத்திரம் திட்டம் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த் திட்டத்தை முதலில் தொடங்கியது அ.தி.மு.க.தான். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. போதைப் பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மறைத்து பேசுகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அட்சய பாத்திரம் அமைப்புக்கு கவர்னர் நிதி வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
கவர்னர் குறித்து விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் மரபு. நீங்க கேட்ட காரணத்தால் பதில் கூறுகிறேன். கவர்னருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. இது கவர்னரின் நிதி. நலத் திட்டத்திற்குதான் இந்த நிதியை கவர்னர் கொடுத்துள்ளார் என்றார்.
அதை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அ.தி.மு.க. கூட்டணியில்தான் பா.ஜ.க. உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். பாராளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


