முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      இந்தியா
India-Corona 2023-03-30

இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,509 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஒரே நாளில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 13,509 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 2.7 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71 ஆகவும் உள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 68 ஆயிரத்து 321 ஆக உள்ளது. ஒரு நாளில் 1,396 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லியில் இரண்டு பேர், இமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர், கேரளாவில் 8 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 862 ஆக உள்ளது.

இதுவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 220.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஜனவரி 16 ஆம் தேதி தொற்று பாதிப்பே இல்லை என்று இருந்த நிலையில் நேற்று முன்தினம் மட்டும் டெல்லியில் 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து