முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
EPS 2023-02-23

Source: provided

சென்னை : சென்னையில் வரும் 7-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை  செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து