முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் ஐ.பி.எல் தொடரில் இருந்து வில்லியம்சன் விலகல்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      விளையாட்டு
Williamson 2023 04 01

Source: provided

ஐபிஎல் 16-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி பீல்டிங் செய்த போது வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. ருதுராஜ் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற தடுக்க முற்பட்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாதிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் ஐபிஎல் முழு சீசனில் இருந்தும் விலகியுள்ளார்.

________________

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார் சிந்து

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, டென்மார்க்கைச் சேர்ந்த மியா பிளிச்பெல்டுடன் மோதினார். இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

________________

சிக்சரில் சாதனை படைத்த சென்னை கேப்டன் டோனி

16-வது ஐபிஎல் தொடர் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சென்னை கேப்டன் டோனி 7 பந்தில் ஒரு சிக்சர் உள்பட 14 ரன்கள் எடுத்தார். டோனி அடித்த அந்த சிக்சர் மூலம் அவர் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். 

அந்த சிக்சர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி அடித்த 200-வது சிக்சராகும். அதேபோல், ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டோனி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒரு அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு: கிறிஸ் கெயில் - 239 (பெங்களூரு) ஏபி டிவில்லியர்ஸ் - 238 (பெங்களூரு போலார்டு - 223 (மும்பை) விராட் கோலி - 218 (பெங்களூரு) டோனி - 200 (சென்னை) இந்த பட்டியலில் கோலி மற்றும் டோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். எஞ்சிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து